அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2
தலைப்பு | அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2 |
---|---|
எழுத்தாளர் | மஞ்சை வசந்தன் |
பதிப்பாளர் | திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 164 |
பதிப்பு | ஏழாம் பதிப்பு - 2014 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.40/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/arthamatra-hindu-matham-part-2.html
அறிவுச் சோலையில் அருத்த மலர்
அர்த்தமற்ற இந்துமதம் முதல் பாகம் வெளியிட்டு 17 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டாம் பாகம் வெளியிடப்படுகிறது.
இதில் பல கட்டுரைகள் 1979 - ஆம் ஆண்டே எழுதப்பட்டவை : என்றாலும், பல்வேறு சூழலால் வெளியீடு தடைபட்டது. இப்போது திண்டுக்கல் தோழர் பார்த்திபன் முயற்சியால் உங்கள் முன் மலர்ந்து மணக்கிறது.
அர்த்தமற்ற இந்துமதம் முதல் பாகம் தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெளிவந்த உடனே குன்றக்குடி அடிகளார் படித்து மகிழ்ந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் பாராட்டினார்.
தமிழ்ச் சான்றோர் பலரும், அரசியல் தலைவர்களும், திரைப்படத் துறையினரும் துணிந்து முன்வந்து பாராட்டினர்.
முதல்பாகம் மலேசிய நாட்டிலும் வெளியிடப்பட்டு, தடைசெய்ய இந்து சங்கத்தால் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு பரிசீலனைக்குப் பின் தடை செய்ய முடியாதென அறிவிக்க, நாடு முழுக்க விற்பனை ஆகி நல்ல பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்த்தமற்ற இந்துமதம் படித்த வாசகர்களே தன் ஆர்வ உந்துதலால் சவால் விட்டும், பரிசு அறிவித்தும் ஆர்ப்பரித்தமை மாறுபட்ட அனுபவமாகும்.
ஒரே நாளில் இரண்டாயிரம் படிகள் கூட விற்பனை ஆகிச் சாதனை படைத்த சம்பவம் உண்டு.
''ஒரு லட்சம் பரிசு தந்தால் மறுப்புக் கூறுகிறேன்'' என்ற கடிதங்கள் வந்தன. நான் அறிவித்து விட்டேன். மறுப்பு மட்டும் ஏனோ வரவில்லை .
திரு. கண்ணதாசன் அவர்களைப் பொது மேடையில் நேரடியாகச் சந்தித்துச் சவால் விட்டேன். பாவம்! அவர் சூழல் அப்படியொரு நூலை அவர் எழுத நேர்ந்தது என்பதை அதன்பின் அறிந்தேன்!
திரு. கண்ணதாசன் ஆஸ்தான கவிஞராக இருந்தபோதே, அர்த்தமற்ற இந்துமதம் அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்டது மட்டுமல்ல, அதிகப்படிகள் கோரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்பாகத்தில் விடுபட்ட சில தலைப்புகளை இரண்டாம் பாகத்தில் விளக்கியுள்ளேன்.
தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
உங்களுக்குச் சொல்ல வேண்டிய பல செய்திகளை உள்ளே ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளேன். எனவே இங்கு அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.
பகுத்தறிவுத் தோட்டத்தில் அரிதாய் மலரும் அடுத்த மலர். எடுத்து நுகர்ந்து, அல்லனவற்றை விடுத்து உயர்ந்து வாழ வாழ்த்துகின்றேன்.
படித்து முடித்ததும் பட்டதை எழுதும்படிப் பணிவுடன் வேண்டுகிறேன்.
என்றும் உங்கள் ஊழியன்,
மஞ்சை வசந்தன்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: