அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1 | சுவைத்தவர்கள் சொல்கிறார்கள்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/arthamatra-hindu-matham-part-1.html
சுவைத்தவர்கள் சொல்கிறார்கள்
" நூல் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் எழுதப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நூல்களை மேலும் தொடர்ந்து எழுத நமது தமிழ் மக்கள் தங்களுக்குத் தொடர்ந்து ஊக்கந்தர வேண்டுமென்று விரும்புகிறேன்.'
-டாக்டர் 'பொற்கோ' சென்னைப் பல்கலைக் கழகம் ''இதுவரை நான் படித்த பகுத்தறிவு நூற்களில் பார்த்திராத அருமையான விளக்கங்களை மிக எளிய நடையில் தங்களின் நூலில்தான் படித்தேன். இவ்வளவு இளம் அகவையில் பெரும் பெரும் தத்துவங்களையெல்லாம் மிக எளிய நடையில் ஒரளவே தமிழ் கற்றவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளீர்கள்.
- நாரண திராவிடச் செல்வன், மலேசியா "அர்த்தமற்ற இந்துமதம் நூலைப் படித்தேன். மிக அருமையாகவுள்ளது. நல்ல சிந்தனை; சிறந்த அறிவு; பிற்போக்குவாதிகளுக்கும், மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கும் நல்ல சவுக்கடி. சில உதாரணங்களை நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன். உங்களது இந்தப் பணி தொடர்ந்து நடக்கட்டும்."
- ராஜேஷ், திரைப்பட நடிகர், சென்னை ''கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்துக்கு மறுப்பு நூல் இது. மஞ்சை வசந்தன் இந்தப் புத்தகத்தில் விதி, பிறவிகள், பாவபுண்ணியம் என்பது எல்லாம் கிடையாது என்று வாதாடுகிறார். மதம் என்றாலே அது மடமையின் இருப்பிடம் என்று இவர் கூறுகிறார். எளிய நடை, ஆணித்தரமான வாதங்கள், ஆதார மேற்கோள்கள்."
- தினகரன் நாளிதழ், சென்னை ''சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மதத்தின் மூடத் தன்மைகளை ஆணித்தரமாக எழுதியுள்ளீர்கள். அனுபவபூர்வமான கட்டுரை நூல். இது போன்ற நூல்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும். இது இன்றைக்கு மிகவும் அவசியம்.''
- மெர்வின் எழுத்தாளர், சென்னை - 4 ''அர்த்தமற்ற இந்துமதம்” மக்களின் மடமை இருள் அகற்ற நம் நாட்டில் மட்டும் அல்ல, அயல்நாடுகளிலும் வெளியிடப்படவேண்டும். - சா. க. அறிவரசன், தலைமைச் செயலகம், சென்னை -9
(இந்நூல் மலேசியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது)