அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1
தலைப்பு | அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1 |
---|---|
எழுத்தாளர் | மஞ்சை வசந்தன் |
பதிப்பாளர் | திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 232 |
பதிப்பு | Thired Edition - 2015 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.50/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/arthamatra-hindu-matham-part-1.html
அணிந்துரை
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், அர்த்தமற்ற கருத்துக்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள கண்ணதாசனின் நூலுக்குச் சரியான சூட்டுக்கோலாக இந்நூல் வெளிவந்துள்ளது.
பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்த வாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர் மஞ்சை வசந்தன்.
பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.
கடவுள் இல்லையென்பதையும் விதி, பிறவிகள், பாவ புண்ணியம் என்பதெல்லாம் கிடையாது என்பதையும் ஆதாரங்களோடு தெளிவாய் விளக்கியுள்ளார்.
பகவத் கீதையின் பித்தலாட்டங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சகுனங்கள் பார்க்கக்கூடாது என்பதையும், கனவுகள் பலிக்காது என்பதையும் சரியான ஆதாரங்களோடும், வாதங்களோடும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.
இயக்கத்தை நோக்கி ஏராளமாய் வந்துகொண்டு இருக்கும் இளைஞர் பட்டாளத்தில் தோழர் மஞ்சை வசந்தனும் ஒருவர் ஆவார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட வழிநடைப் பிரச்சாரப் படையில் இவரும் ஒரு படைவீரராகச் சென்று தந்தை பெரியாரின் கருத்துக்களைப் பரப்பியவராவார்.
பகுத்தறிவு மணம் பரப்பிப் போலி வாதங்களின் முகத்திரையைக் கிழித்தெறிய வந்திருக்கும் இந்நூலுக்குக் கழகத் தோழர்களும், பகுத்தறிவாளர்களும் நல்ல ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இளைஞர் வசந்தனின் நன்முயற்சிக்கு நமது பாராட்டுதல்கள்!
அன்புள்ள,
19-6-1979 கி. வீரமணி எம்.ஏ., பி.எல்.,
சென்னை பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: