அண்ணாவின் மொழிக் கொள்கை - வாழ்த்துரை

அண்ணாவின் மொழிக் கொள்கை - வாழ்த்துரை

தலைப்பு

அண்ணாவின் மொழிக் கொள்கை

எழுத்தாளர் எ.ராமசாமி
பதிப்பாளர்

பூம்புகார் பதிப்பகம்

பக்கங்கள் 256
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை தடிமனான அட்டை
விலை Rs.180/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/annavin-mozhik-kolkai.html

 

வாழ்த்துரை

பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் அண்ணாவின் மொழிக் கொள்கை. அவரது ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து நூலாக வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துரை கேட்டுள்ளார்.

இந்நூலுக்கு மேலும் மெருகூட்டத்தக்க வகையிலே சிறப்பானதோர் அணிந்துரையை நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் வழங்கியிருக்கிறார்.

அண்ணாவின் மொழிக் கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை. அந்த வகையிலே கழகத்தின் மொழிக் கொள்கை பற்றி வருங்காலத் தலைமுறை சுலபமாகத் தெரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவிடும் என்பதில் ஐயமில்லை.

மொழிப் பிரச்சினை குறித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட கருத்துகள் எல்லாம் இந்நூலிலே இடம் பெற்றுள்ளன. கழகத்தின் மொழிக் கொள்கை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பு வோருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் பெருந்துணையாகும். நூலாசிரியரின் இந்த அரிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புள்ள

மு. கருணாநிதி

Back to blog