Skip to content

அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - ஆசிரியர் உரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
ஆசிரியர் உரை

டாக்டர் முகமது யூசுப் இர்ஃபான்

நல் வாய்ப்பாக சமயச் சார்பற்ற குடியாட்சிச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களே ஒரு தீண்டத் தகாதவராக இருந்தார். உலகிலேயே சிறந்த அரசியல் அமைப் புச் சட்டத்தின் சிற்பியான அவரின் தேர்ந்த நுண்ணறிவையும் சிறப்பினையும் அகில இந்திய தேசியக் காங்கிரசில் இருந்த பிராமணிய சமுக அமைப்பு கவர்ந்து கொண்டது. இந்திய அர சியல் அமைப்புச் சட்டம் இயல்பாக அங்கிகரிக்கப் பட்டதற்குப் பிறகு நேருவின் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்று அவர் தூண்டப் பட்டார், கட்டாயப் படுத்தப் பட்டார். இந்திய சமுகத்தில் சமயச் சார்பற்ற குடியாட்சிச் சட்டத்தினை அமல் செய்யத்தக்க நேரத்தில் சுதந்திர இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் இருந்து அவர் அகற்றப்பட்டது மட்டுமில்லை. மகாராஷ்ட்ரம், பம்பாய், புனே மற்றும் பெங்களூர் போன்ற பெரிய நகரங்களின் வீதிகளிலும் சாலைகளிலும் இருந்த அவரின் சிலைகள் அவமானப்படுத்தப் பட்டன, உடைத்தெறியப்பட்டன. ஆரியப் பிராமணர்கள் சிவாஜியைச் சுரண்டிய பிறகு அவரை அவமானப் படுத்தியதைப் போல அம்பேத்கரையும் அவமானப்படுத்தினர்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு