அண்ணாவின் கட்டுரைகள் - பதிப்புரை

அண்ணாவின் கட்டுரைகள் - பதிப்புரை

தலைப்பு

அண்ணாவின் கட்டுரைகள்

எழுத்தாளர் அண்ணா
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 444
பதிப்பு ஆறாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.450/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/annavin-katturaigal.html

 

பதிப்புரை

தமிழரைத் தட்டி எழுப்பிய தலைவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவர் பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். சொற்பொழிவில் சுவையைக் கூட்டியவர் பேரறிஞர் அண்ணா. உபந்நியாசமாக நெளிந்துகொண்டிருந்த புழுவைச் செவிகுளிரவைக்கும் தேனிசைச்சொற்பொழிவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. மேடைச் சொற்பொழிவுக்கு மெருகூட்டியதனைப் போன்று, எழுத்து நடையிலும் எழுச்சியை உண்டாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது"

என்னும் வள்ளுவரின் கூற்றுக்குச் சான்றாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா - சிறுகதை, புதினம், நாடகம், தம்பிக்குக் கடிதம். தலையங்கம், சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். இவற்றுள் அச்சில் நூலாக இதுவரை வெளிவராத கட்டுரைகளை நாங்கள் வெளியிடுவதற்குப் பேரறிஞர் அண்ணாவின் பேரன்பின் மகனார் அண்ணா பரிமளம்' அவர்கள் திரட்டி எங்கள் பதிப்பகத்திற்காக வழங்கியுள்ளார். அவர்க்கு எங்களது பதிப்பகத்தின் சார்பாக நன்றி கூறுகிறோம்.

அண்ணாவின் கட்டுரைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகின்றோம்.

தமிழர் எழுச்சி பெற - தன்மான உணர்வினைப் பட்டை தீட்டிக் கொள்ளப் பேரறிஞர் அண்ணாவின் இந்தக் கட்டுரைகள் பேருதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

அண்ணாவின் பெருமதிப்பிற்குரிய படைப்புகள் ஏற்கெனவே எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டவை போக எஞ்சியவற்றையும் இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றோம்.

திராவிட இயக்க உணர்வுடைய ஒவ்வொருவரது கரங்களிலும் இந்நூல்கள் தங்கித் தகைமை ஊட்டும் என்பதில் அய்யமில்லை.

பதிப்பகத்தார்

Back to blog