அண்ணாவின் கட்டுரைகள் - என்னுரை

அண்ணாவின் கட்டுரைகள் - என்னுரை

தலைப்பு

அண்ணாவின் கட்டுரைகள்

எழுத்தாளர் அண்ணா
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 444
பதிப்பு ஆறாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
விலை Rs.450/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/annavin-katturaigal.html

 

என்னுரை

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆகிய இதழ்களில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி பின்னர் 'திராவிட நாடு', 'காஞ்சி', 'Home Land', 'Home Rule' ஆகிய இதழ்களில் 1969 வரை எழுதினார்கள். அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் 'தம்பிக்குக் கடிதம்', 'ஊரார் உரையாடல்', 'அந்திக் கலம்பகம்' என சற்றேறக்குறைய 1430 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகளில் 30 விழுக்காடே இதுவரை புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. 70 விழுக்காடுகள் வெளிவரவில்லை. தொடக்கக் காலத்தில் 'பரதன்', 'வீரன்', 'சௌமியன்', 'நக்கீரன்' எனும் புனைப் பெயர்களில் எழுதியிருக்கிறார். மேலே சொன்ன அந்த 70 விழுக்காடு கட்டுரைகள் அழிந்துவிடாமல் தேடிப் பதிப்பித்து இன்றைய இளைய சமுதாயத்திற்குக் கொண்டு சேர்ப்பதே இப்போதைய அவசரப்பணி. அதை அண்ணா பேரவை செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை 60 வயது அடைந்தவர்கள் பார்த்திருக்க முடியாது. அவை இப்போது முதன் முறையாக ஒரு தொகுப்பாக உங்கள் கைகளில் இதை அச்சுக் கோர்த்த, பிழைதிருத்திய நண்பர்கள், இதை அழகாக அச்சிட்ட 'சீதை பதிப்பகத்தார்' இவைகளை நமக்குத் தந்துதவிய பெரியார் நூலகம், திரு. இரா. செழியன் ஆகியோருக்கு அண்ணா பேரவை தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.

டாக்டர். அண்ணா பரிமளம்

தலைவர் - அண்ணா பேரவை 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog