Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

2ஜி அவிழும் உண்மைகள் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 
பதிப்புரை

நவீன அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தி இயற்கை வளங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி. அந்த வகையில் அலைக்கற்றை என்பது மிகப் பெரிய வளமாகக் கருதப்படுகிறது. அலைக்கற்றையை வேறுபட்ட அலை நீளங்களை வகைப்படுத்தி வானொலி, தொலைக்காட்சி, கணினி, செல்பேசி போன்ற நவீன கருவிகள் இயங்கப் பயன்படுத்து கிறோம். தந்தி, தொலைபேசி, செல்பேசி என ஏற்பட்ட வளர்ச்சி யினால் இன்று செல்பேசி இல்லாதவர்களே இல்லை என்னும் அளவு மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளது. அலை வரிசை என்பது பல்வேறு தனியார் நிறுவனங்ளுக்கு ஒதுக்கீடு செய்யப் பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அலை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாச்சி சாமானியனும் பயன்படுத்த ஏற்பட்ட விரைவான வளர்ச்சியை ஊழல் எனச் சொல்லி எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் பூதாகாரமாக உருவெடுக்கச் செய்தன. கருத்தியலிலான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்டி நடைபெற்ற விவாதங்கள் நாடறிந்தவை. அதன் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்ததே "2ஜி அவிழும் உண்மைகள்" என்னும் இந்த நூல்.

முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பேசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ.இராசா அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கின்றார். அவர் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற வழக்கு எடுத்துச் செல்லப்பட்ட முறை, நடைபெற்ற முறை, வேண்டுமென்றே உண்மைகள் மறைக்கப்பட்ட முறை இவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சரியான சான்றாதாரங்கள் தொகுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார். இந்த நூலைப் படிப்போர் மேன் மக்கள் எனப்படும் மேலோரின் இயல்பினைக் காணலாம். திரு.ஆ.இராசா அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருந்ததையும் உணர முடியும்.

இத்தகைய விழிப்புணர்வு நூலை எமது பதிப்பகத்தின் வழியே வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் வாங்கிப் படித்து உண்மை உணர்வார்களாக.

பதிப்பகத்தார்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு