திமுக தமிழுக்குச் செய்தது என்ன?
திமுக தமிழுக்குச் செய்தது என்ன?
தலைப்பு | திமுக தமிழுக்குச் செய்தது என்ன? |
---|---|
எழுத்தாளர் | A.ராமசாமி |
பதிப்பாளர் | சீதை பதிப்பகம் |
பக்கங்கள் | 352 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |
விலை | ரூ.300/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/d-m-k-thamizhukku-seithathu-enna.html
பதிப்புரை
தமிழ் மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாடும் அவர் பேசியதும் எழுதியதும் ஆட்சியில் செலுத்தியதும் தமிழ் மொழி தான். அக்காலத்தில்தான் தமிழ் இலக்கியங்கள் தொகையும் பாட்டும் அற நூல்களும் பக்தி இலக்கியங்களும் காப்பியங்களும் தோன்றித் தமிழைச் செம்மொழி ஆக்கின. பின்னர் நிகழ்ந்த படையெடுப்புகளால் மொழிக்கலப்பும் இனக்கலப்பும் பண்பாட்டுக் கலப்பும் ஏற்பட்டன. பின்னர் தமிழ் மொழி ஓரங்கட்டப்பட்டு செய்யப்பட்ட மொழியென்னும் சமற்கிருதத்துக்கு தூது சென்றுள்ளதை அறிகிறோம். ஆக 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மணிப்பிரவாளத் தமிழாக மாறிவிட்டது. அந்நிலையை மாற்றித் தமிழை மீட்டெடுப்பதற்காக நடத்திய போராட்டங்களும் செய்த தியாகங்களும் போல வேறு எங்கும் நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர் உலகமெங்கும் பரவி இருந்த, உலக இலக்கியங்களின் உள்ளீடாக இருந்த உலகிலேயே வளமையும் செழுமையும் இளமையும் இனிமையும் பழமையும் பொருந்தியிருந்த தமிழ்மொழியைப் புறக்கணித்துவிட்டு இவற்றில் எதுவுமே இல்லாத இந்தியை ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. பண்டிதர் நிலையில் தமிழ் மொழியை இப்போது மைய அரசும் அழிக்கத் திட்டமிட்டு செயல்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் திராவிட இனயெழுச்சியும் மனஉணர்ச்சியும் பீறிட்டெழுந்தது. அதற்கு கட்சி நிலையில் அரசியல் பலமாக அமைந்த தியாகத்தின் உருவாக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழன் தமிழனாக வாழ, தன்மானம் உள்ளவனாகத் தலை நிமிர்ந்து நடக்க, உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வாரி உங்கிய மூல மொழி தமிழ் என்பதை உலகிற்கு அறிவிக்கத் தோன்றிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த பக்கத்தின் ஆட்சி மலர்ந்த பின்னர்தான் கல்விமொழியாக, சமய மொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக, ஆலய மொழியாக, மக்கள் மொழியாக, வணிக மொழியாக, பல்வேறு நிலையான போராட்டங்கள், தியாகங்களுக்குப் பின்னர் "எண்ணுக தமிழில் எழுதுக தமிழில்" என்னும் நிலை உருவாகியது. உரைநடை, கவிதை, இதழ்கள், திரையுலகம், மேடை என அனைத்து நிலையிலும் தமிழை முதன்மொழியாக்கியதோடு செம்மொழியாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை வலுவான சான்றுகள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றுடன் நிறுவி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா , கலைஞர் என விடுதலைக்கு முன்பே தொடங்கி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வழியே வளர்ந்து இன்றைய நிலைவரை தமிழின் வளர்ச்சிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய அரிய சாதனைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்தத் 'தி.மு.க. தமிழுக்குச் செய்ததது என்ன?' என்னும் அரிய நூல்.
முக்கால் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட தமிழ்மொழி வளர்ச்சி வரலாற்றை இந்த நூல் தெளிவுப்படுத்துவதாக உள்ளது. பல்வேறு பதவிகளை வகித்தும் அரிய நூல்கள் பலவற்றை எழுதியும் விருதுகளும் பாராட்டுகளும் என வெற்றிகளைக் குவித்த பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். நில வரலாறு, நாகரிக வரலாறு, பண்பாட்டு வரலாறு, இதழ்கள், நூல்கள் எனப் பல்வேறு நிலையில் புலமை பெற்றிருக்கும் பேராண்மை இந்த நூலில் வெளிப்படக் காணலாம். தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் தமிழ் அறிஞர்கள் எனப் பல நிலையினரும் படித்துப் பார்க்க வேண்டிய அற்புதமான நூல். மொழிப் போராட்ட வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல்.
இத்தகைய அரிய இயக்க ஆவணமாகத் திகழும் நூலை எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாசக அன்பர்களும் தமிழ் உணர்வாளர்களும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.
பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: