Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

விஞ்ஞான லோகாயத வாதம் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பதிப்புரை

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மான் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர். அவரது நண்பர்கள் வியந்தனர்; ஆராய்ச்சியாளர்கள் உவந்தனர். முற்போக்கு உலகம் மகிழ்ந்தது.

ராகுல்ஜி எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத - வார - நாளிதழ்கள் பல வெளிவந்தன. அவர் எழுதிக் குவித்த நூல்கள் பல.

மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்து நூல்களாக வடித்தார்.

'விஞ்ஞான லோகாயத வாதம்' என்னும் இந்நூலில் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறார்.

இந்நூலை இந்தியிலிருந்து தமிழ் மொழியில் வழங்கியவர் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மும்மொழி வல்லுநர் திரு. ஏ.ஜி. எத்திராஜுலு அவர்கள்.

இந்நூல் 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பாக என் சி.பி.எச். வெளியீடாக வெளியானது. 2003ல் இரண்டாம் பதிப்பு வெளியான நிலையில் தற்போது கால அவசியத்தை கருத்தில் கொண்டு வாசகர்களின் தேவை பொருட்டு மீள் பதிப்பாக வெளியிடுகிறோம்.

 

- பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு