வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - நன்றியுரை
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு - நன்றியுரை
| தலைப்பு |
வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு |
|---|---|
| எழுத்தாளர் | அ.வேலுச்சாமி |
| பதிப்பாளர் |
சீதை பதிப்பகம் |
| பக்கங்கள் | 488 |
| பதிப்பு | முதற் பதிப்பு - 2019 |
| அட்டை | காகித அட்டை |
| விலை | Rs.500/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/veezhchiyuratra-thamizhinam-ezhuchipettra-varalaru.html
நன்றியுரை
திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் திராவிட இயக்க வரலாற்றைத் தொடக்கம் முதல் நடந்த நிகழ்வுகளை தமிழினம் குறிப்பாக இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சி பெற்ற வரலாறு' என்ற தலைப்பில் சுருக்கமாக சிறிய நூல் ஒன்றை தொகுக்க விரும்பினேன்.
எனக்கு நினைவு தோன்றிய நாளிலிருந்து, பகுத்தறிவுக் கொள்கையின் மூலகர்த்தா தந்தை பெரியார் அவர்களின் வழியில் இயங்கும், சிந்திக்கத் தெரிந்த அறிவார்ந்த பெருமக்கள் நிரம்பிய இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாகவும், 2001ஆம் ஆண்டு ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான உறுப்பினராகவும் இருக்கிறேன். கழகம் என்போன்ற விளிம்பு நிலையிலுள்ள மக்களின் காவலனாகவும், எங்களின் முன்னேற்றத்திற்கு செய்த அளப்பரிய நன்மைகளை எண்ணிப் பார்த்தேன். தி.மு.க. தொடர்ந்து செய்து வரும் நன்மைகளை மட்டும் பெற்றுக்கொள்ளும் நாம் தி.மு.க.விற்கு நம்மால் இயன்றவற்றைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் தோன்றியதே இச்சிறிய நூலின் தொகுப்புப் பணி. இந்நூலைப் படிப்பதன் மூலம் தற்கால இளைஞர்கள் திராவிட இயக்கம் பற்றியும், இயக்கத் தலைவர்களின் தியாகங்களையும் அறிந்து கொள்வதுடன் இன உணர்வும் தமிழ்மொழி உணர்வும் பெறுவார்கள் என நம்புகிறேன்.
இந்நூலுக்கு அணிந்துரை வேண்டுமென்று தி.மு. கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான மதிப்பிற்குரிய தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து நூலின் மூலப்பிரதியைக் கொடுத்தேன். இன்முகத்துடன் பெற்றுக் கொண்டு, விரைவில் அணிந்துரை தருவதாகக் கூறினார். அவ்வாறே சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கினார். தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
திராவிட முன்னேற்றக்கழகக் கொள்கைப்பரப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உயர்திரு. ஆ. ராசா அவர்களும் நல்லதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் மூத்த முன்னோடியும் கழகத் தலைமை அலுவலகமாம் அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு பொறுப்பு களை வகித்தவரும் நாடறிந்த சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்ற மேலவையில் 3 முறை உறுப்பினராக இருந்தவருமான உயர்திரு. ச.விடுதலை விரும்பி அவர்கள் இந்நூல் முழுவதையும் படித்து கழக வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் சேர்க்க வேண்டுவனவற்றைச் சேர்த்து நூலை முழுமைப்படுத்திக் கொடுத்தார். அவரது பணிக்கும் உதவிக்கும் என்றென்றும் நன்றி யுடையவனாக இருப்பேன்.
நூலைத் தொகுத்து இறுதி வடிவாக்கம் பெறும் வரை அனைத்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியதி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் உயர்திரு. மு.பெ. சாமிநாதன் அவர் களுக்கும், திருப்பூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. இல. பத்மநாபன் அவர்களுக்கும், பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களுக்கும், மடத்துகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர் களுக்கும், திருப்பூர் தெற்கு மாவட்டக் கழக இளைஞர் அணி அமைப் பாளர் திரு ஜெயகுமார் அவர்களுக்கும். உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழக பொறுப்பாளர் திரு. எஸ். செல்வராஜ் அவர்களுக்கும், நூல் வெளியிடபலவகைகளில் உதவி புரிந்த உடுமலைப்பேட்டை நகர தி.மு.க செயலாளர் திரு.மத்தின் அவர்களுக்கும், உடுமலைப்பேட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் திரு. செ.வேலுச்சாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கோள் நூல்களைக் கொடுத்து உதவிய திரு. கே.என். திராவிடமணி அவர்களுக்கும், திரு. குப்புச்சாமி (ACTO ஓய்வு) அவர் களுக்கும், திரு. ஆறுமுகம் (விஸ்கோஸ்) அவர்களுக்கும், தி.ப.தொ.மு. சங்க முன்னாள் செயலாளர் திரு.கி. ஆறுமுகம் அவர்களுக்கும் தி.மி.வா.மு.சங்க முன்னாள் செயலாளர் திரு. தெண்டபாணி அவர் களுக்கும், உடுமலை நகரில் திராவிட இயக்கம் வளர இறுதி மூச்சுவரை உழைத்த முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.வெகாளிப்பன் அவர்களின் புதல்வர் திரு.வெ.கா.செல்வராஜ் அவர்களுக்கும் நூலைத் தொகுக்கும் பணி தொடர்பாக பல முறை சென்னைக்கு என்னுடன் வந்து உதவி புரிந்த, உடுமலை கிழக்கு ஒன்றியக்கழக பொறுப்பாளர் திரு.ப.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், கணக்கம்பாளையம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு. இரா.லோகநாதன் அவர்களுக்கும் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.த. இளங்கோவன் அவர்களுக்கும், இந்நூலை சிறப்பான முறையில் அச்சிட்டு வழங்கிய சென்னை கௌரா அச்சகத்தாருக்கும் என மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தொகுப்பாசிரியர்
அ. வேலுச்சாமி,
தலைமையாசிரியர் (ஓய்வு)