சாதியின் குடியரசு - ஆசிரியர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
ஆசிரியர் குறிப்பு
ஆனந்த் டெல்டும்டே மஹாராஸ்டிராவில் ரஜூர் என்ற சிறு நகரில் பிறந்தவர். பொறியாளர், அஹமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (IIM) இல் எம்.பி.ஏ பட்டமும், முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றவர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநர், பெட்ரோநெட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (M.D), என உயர் பதவிகள் வகித்தவர். அவரது மணைவி ரமா, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பேத்தி ஆவார். மாணவராக இருந்த போதிருந்தே உரிமைகளுக்காவும், அடக்கு முறைகளுக்கு எதிராகவும் போராடும் செயல்பாட்டாளராக இருந்துள்ளார். பல நூல்களின் ஆசிரியர். பல புகழ்பெற்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுபவர். தற்போது கோவா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தல் பேராசிரியர்.