Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

அண்ணல் அம்பேத்கர் மதச்சாபற்ற இந்தியக் குடியரசின் தந்தை - முகவுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
முகவுரை

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்: மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் தந்தை' என்னும் இந்நூல் பேராசிரியர் சையது முகமது யூசுப் இர்பான் அவர்களால் எழுதப்பட்டது. அடிப் படையில் இது டாக்டர் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியது. ஆனால் இந் நூலினை வரலாறு, பாகிஸ்தான் பற்றிய படிப்புகள், அரசியல் அமைப்புச் சட்டம், இந்து மதத்தின் தொன்மம், தத்துவம், இலக்கியம் என்றும் வகைப்படுத்தலாம், இந்நூல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தேசத் தொண்டுகளையும் நவீன இந் தியாவின் தேசியத் தலைவர் என்னும் நிலையில் அவர் சந்தித்த பிரச்சினைகளையும் உள்ளார்ந்த தடைகளையும் வெளிச்சமிட் டுக் காட்டுகிறது.

நவீன இந்தியாவின் மிகச்சிறந்த ஆறு கல்விமான்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் புதிதாகப் பிறந்த இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. இந்திய சமூகத் தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த தலித்துகள் தீண்டப் படாதவர்களாக இருக்கிறார்கள். பிராமணர் அல்லாத மக்களுக்காகப் போராடும் எவருக்கும் இந்திய பிராமண சமுகம் நன்றி பாராட்டுவதில்லை. இலங் கை மக்களோடு கடுமையாகப் போராடி சீதையை மீட்டுக் கொண்டு வந்த பிராமணர் அல்லாத தென்னிந்தியர்களுக்கு பிராமணத் தலைவரும் கடவுள் இராமரும் எப்படி நன்றி பாராட்டியதில்லையோ அதைப் போலவே வரலாறு நெடு கிலும் பிராமணிய கொடுமைக்கு டாக்டர் அம்பேத்கர் பலியா னார். இந்திய கடவுள் இராமர் தென்னிந்திய பிராமணர் அல்லாதாருக்கு நன்றியுடையவராக இருந்திருக்க வேண்டும். மாறாக அவர்களை உதவி செய்த மனிதர்களாகப் பாராட்ட வில்லை, புகழவில்லை. அனுமன் என்னும் குரங்கு வடிவத் தையே கொடுத்தார். உதவி செய்தவரும் அன்பு நிறைந்தவருமான அவர்களை மனித வடிவற்ற குரங்குகள் என்னும் விலங் குகளாகப் பாவித்ததன் மூலமே அவர்களுக்கு நன்றி பாராட்டினார்.

நூலாசிரியர் ஆய்வு நோக்கில் எழுதிய இந்நூலில் டாக் டர் அம்பேத்கார் அவர்கள் நவீன மதச்சார்பற்ற இந்தியாவின் தந்தையாகவும் பிராமணர் ஆதிக்கம் செய்யும் இந்தியாவின் புனிதராகவும் நிமிர்ந்து நிற்கிறார் என்பதை உயர்த்திச் சொல்கி றார். இந்திய வரலாற்றாளர்கள், அறிவாளிகள் போன்றோ ரின் நேர்மையற்ற அறிவினையும் தோலுரித் துக் காட்டுகிறார். அதே நேரத்தில் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவிற்கு செய்த உயர் பணிகளோடு இந்தியவிற்கு அம்பேத்கர் செய்த பணிக ளை ஒப்பிடுகிறார் யூசூப் இர்பான் அவர்கள். ஆபிரகாம் லிங் கன் அவர்களுக்கு ஆட்சியும் அதிகாரமும் இருந்தன. அவர் நவீன அமெரிக்காவின் தலைவராக உயர்ந்தார். டாக்டர் அம் பேத்கருக்கோ ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை, தேசியத் தலைமையோ, சமுக உயர் தகுதியோ இல்லை. ஆகவே அவர் நிலையாக விலக்கி வைக்கப்பட்டார். கொடுமையாக நடத் தப்பட்டார். நவீன இந்தியவிற்கு மதச்சார்பற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தையும் சோசலிச அரசையும் அவர் வடிவ மைத்து அளித்தார். அப்படி வடிவமைத்திருந்தாலும் அதனைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப் படாதவராக இருந்தார். அதனால் பிராமணியக் குறுகிய சிந்தையாலும் அநீதியாலும் சமத்துவ மின்மையாலும் அவர் பாதிக்கப்பட்டார்.

ஆபிரகாம் லிங்கன் தென் அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கப் பாடுபட்டார். தென் அமெரிக்காவும் வட அமெரிக்காவும் இணைந்து வாழ வழிவகுத்தார். டாக்டர் பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் ஆபிரகாம் லிங்கனைப் போல் பிராமணர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே சமுக மனித நேய சமத்துவத்தை கொண்டு வரப் போராடினார். கொடுமை மிகுந்த இந்திய சாதிய சமுகத்தின் நடுவே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற் றைக் கொண்டுவரப் பாடுபட்டார். தலித் மக்களின் சமுக பொருளாதார சமய இணைவில் அரசியல் மற்றும் பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முன்னேற்றத் திற்குப் பாடுபட்டார். தென்னாட்டுச் சூத்திரர்களுக்கும் வடநாட்டுப் பிராமணர்களுக்கும் இடையே சமுக அரசியல் இணக்கத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். மிகக் குறைந்த காலத்திலேயே தனது இலக்கினை வென்றார். தலித் இயக்கத்தின் (தீண்டப்படாதவரும் சூத்திரர்களும்) சாதிவாரி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு 1932 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. காங்கிரஸ் மற்றும் இந்து பிராமணத் தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, மதன் மோகன் மாளவியா மற்றும் ஏனைய பிராமணர் போன்றோர் இதனை எதிர்த்தனர். அம்பேத்கருக்கு எதிராக அனைத்து விதமான சாதிய வேறுபாடுகளை ஏவினாலும் இந்தியா தலித்துகளை மனிதர்கள் என்று ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கு சமூகப் பொருளாதாரச் சமத்துவம், அரசியல், இட ஒதுக்கீடு, அடிப் படை மனித உரிமை போன்றவற்றை உறுதி செய்தது. அத னைக் தொடர்ந்தே தனித் தொகுதி மற்றும் இந்தியா தேசத்த வர் என்பதற்கான இட ஒதுக்கீடு போன்றவற்றைக் கைவிட முன்வந்தனர் என்பது போன்ற செய்திகளை யூசுப் இர்பான் நிறுவி இருக்கிறார். தனித்தொகுதி என்பது இந்து பிராமண நம்பிக்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான அடையாளமாகும்.

இந்து சமயப் பண்பாட்டு அடையாளத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு தனியான அடையாளத்துடன் தலித் துகள் இருப்பார்கள் என்பதில் பிடிவாதமாக இருப்பதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கைவிடவேண்டும் என்று காந்தி சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டிருந்ததாலும் தீண் டப்படாதவர்கள் தகுதியில் மேம்பாடு அடைவதற்கு காங்கிர சும் இந்து பிராமணத் தலைமையும் உதவுவதாக உறுதி அளித் ததன் பேரிலும் டாக்டா. பி.ஆர். அம்பேத்கர் காந்திய இந்துத் துவத்தின் கோரிக்கைகளுக்கு உடன்பட்டார். ஆனால் அகில இந்திய காங்கிரசும் பிராமண இந்துத் தலைமையும் தீண்டப் படாதோர் மாட்டு உண்மையான அன்பு பாராட்டவில்லை, கொடுமை செய்தது, அலட்சியப் படுத்தியது. கொடுக்கப் பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள் ளன. காந்தியின் போலி வாக்குறுதிகளால் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வஞ்சிக்கப் பட்டார், ஏமாற்றப் பட்டார், மோசம் செய்யப் பட்டார். மகாத்மாவும் காங்கிரசும் தீண்டப்படா தோருக்கு உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை. தீண்டப் படாதோர் மீதும் நிழல்படக் கூடாதோர் மீதும் பிராமணியத் தலைமையைத் திணிப்பதில் குறியாக இருந்தனர்.

புனே உடன்படிக்கையின் பின்னே இருக்கும் சதி பற்றி டாக்டர் அம்பேத்கர் சரியான முடிவுக்கு வருகிறார். இந்திய மக்கள் தொகையில் 30 சதமாக இருக்கும் தலித்துகள் சீக்கிய மதத்திற்கு மாறினால் அவர்கள் இந்துப் பண்பாட்டிற்குள்ளே தான் இருப்பார்கள். கிறித்துவ மதத்திற்குப் போனால் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் கிறித்துவர்கள் மகிழ்ச்சி அடை வார்கள். ஆனால் தலித்துகளுக்குக் கிடைக்கப் போவது ஒன்று மில்லை. ஆனால் தலித்துகள் இசுலாத்தைத் தழுவினால் அவர்களுக்கு இரண்டு அடிப்படைப் பலன்கள் கிடைக்கும். 1. சமுகத் தகுதி மற்றும் அரசியல் உரிமை.இந்திய இந்துப் பண் பாடு மற்றும் சமுகத்தில் சமுகத் தாழ்வும் அரசியல் உரிமை இழப்பும் தலித்துகளைப் பிடித்தாட்டும் கொடுமைகள். அவை அவர்கள் இசுலாத்திற்கு வருவதன் மூலம் சரி செய்யப் படும். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 சதமாய் இருக்கிறார்கள். தலித்துகள் முஸ்லிம்கள் ஏனைய சிறுபான் மையினர் போன்றோர் ஒன்றிணைந்தால் அவர்கள் பெரும் சக்தியாக மாறுவர். அவர்களை மறுதலிக்கவோ அலட்சியம் செய்யவோ தண்டிக்கவோ வஞ்சிக்கவோ அவர்களுக்கான மனித உரிமைகளை மறுக்கவோ முடியாது. ஆனால் அவர்கள் அவற்றை அனுபவிப்பார்கள். உண்மையிலேயே பிராமணர்க ளும் ஏனைய உயர்சாதி இந்துக்களும் தான் நவீன இந்தியக் குடியரசில் நிலையான சிறுபான்மையினராக ஆவார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையி னரின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப் பட்டிருந்தா லும் நடைமுறையில் அது பின்படுத்தப்படுவது மில்லை, செயல் படுத்தப் படுவதுமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத் தின் மூலம் தீண்டாமை குற்றமாகும். ஆனால் கடுமையான சமுக சாதி அமைப்போ கசப்பான எதார்த்தத்தின் மூலம் தலித் துகளின் அடிப்படை உரிமைகளை நிலையாகவும் தொடர்ச்சி யாகவும் மறுத்து வருகின்றது. தலித்துகள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் ஒற்றுமையானது சகிப்புத் தன்மையு டன் கூடிய மதச் சார்பற்ற நவின இந்தியாவை உறுதி செய்யும் என்று டாக்டர் அம்பேத்கர் கருத்துக் கொண்டிருந்தார். ஆகவே கற்பி, போராடு, ஒன்றுசேர் என்னும் கோசங்களே சகிப்புத் தன்மையுடன் கூடிய மதச்சார்பற்ற அறிவு சான்ற இந்தியாவை உருவாக்கும் என்று சொன்னார்.

இந்துத்துவம், பாகிஸ்தான் இயக்கம் போன்ற படிப்பு களில் ஆழங்கால் பட்டவரான யூசப் இர்பான், டாக்டர் அம் பேத்கரின் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் போன்றவற்றின் பன்முகத் தன்மைகளைத் திறனாய்வு செய்துள்ளார். எடுத்தவர் எவரும் வாசித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் உள்வாங்கிக் கொள்ளும் நடையிலும் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வாழும் தீண்டப்படா தோருக்கான சுதந்திரம், முன்னேற்றம், சமுகப் பொருளாதார சமயப் பண்பாட்டு தகுதிகளுக்காக நடத்தப்பட்ட போராட் டங்களின் வாயிலாக டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையினை யும் சாதனைகளையும் புரிந்து கொள்ளலாம். புரிதலுக்கான புதிய போக்குகளை இந்நூல் உருவாக்கித் தந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். பேராசிரியர் யூசப் இர்பான் ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள், தீண்டப்படாதோர் இயக்கம் போன்றவற்றை ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய் துள்ளார். ஆங்கிலேயரையும் இந்தியப் பிராமணர்களையும் எதிர்த்து முஸ்லிம்கள் போராடியதைப் போல டாக்டர் அம் பேத்கரும் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரையும் இந்துப் பிரா மணரையும் எதிர்த்துப் போராடினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காயிதே இ அசாம் முகமது அலி ஜின்னா அவர்களும் டாக்டர் அம்பேத்கரும் சாதி, மதம், நிறம் போன்றவற் றைக் கருத்தில் கொள்ளாமல் மக்கள் அனைவருக்குமான அடிப்படை உரிமைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் போன்றவற்றைப் பெறுவதற்காக இணைந்து பணியாற் நினர். இவ்வாய்வு ஆவணமானது உண்மையிலேயே ஆய்வு கள், குறிப்புகள் மற்றும் மேற்கோள்களுடன் கூடிய புள்ளி விவரங்களையும் உண்மைகளையும் கொண்டு எழுதப்பட்டுள் எது. தெற்காசியப் பகுதிகள் முழுவதற்குமான அமைதி, சமூக நீதி, மானுட சமத்துவம் உலகார்ந்த சமத்துவம் என்னும் பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு செம்மாந்த படைப்பினைத் தந்திருக்கும் பேராசிரியர் சையது முகமது யூசுப் இர்பான் அவர்களைப் பாராட்டுகிறேன்.

பேராசிரியர்.டாக்டர்.முஜாகிட் இம்ரான்,

துணை வேந்தர் பஞ்சாப் பல்கலைக் கழகம்,

இலாகூர், பாகிஸ்தான்.

ஜூன் 20.2008.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு