அண்ணல் அம்பேத்கர் - அவதூறுகளும் உண்மைகளும்
சதுர்வர்ணக் கருத்தியல் வன்மங்களால் படிநிலைப்படுத்தப்பட்ட சாதியினரிடையே சமத்துவத்தை நிலைநிறுத்த தம் வாழ்நாள் முழுவதும் தணலில் வெந்த புரட்சியாளர் அம்பேத்கரை - அவர் மறைவிற்குப் பிறகு - தன்வயப்படுத்த இந்துத்துவம் முயல்கிறது. அம்பேத்கரை அவமதிக்கும் இம்மோசடிக்கு மேலும் வலுசேர்க்க, முற்போக்கு முகமூடியுடன் ரங்கநாயகம்மாக்கள் முளைத்துள்ளனர்.
வமதிக்கப்படும் ஒவ்வோர் அம்பேத்கர் சிலையும் எப்படிப் பன்மடங்காகிறதோ, அதேபோல அருண் ஷோரி மற்றும் ஜெயமோகன்களின் அவதூறுகளுக்குப் பிறகும் அம்பேத்கரின் எழுத்துக்கள் அறிவாயுதங்களாய் திக்கெட்டும் முகிழ்த்தெழத் தவறவில்லை. அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் வன்கொடுமைகளுக்கும் அவர்தம் எழுத்துகள் மீதான வன்மங்களுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை.
லித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பெயரளவிலாவது தண்டனை உண்டு. ஆனால் வன்மங்களுக்கு (கருத்துச்) சுதந்திரம் உண்டே! வன்மங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருக்கும் நிலையில் வன்கொடுமைகள் அதிகரிக்காமல் என்ன செய்யும்? விளைவு: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தலித் மக்கள் மீது 16 வகையான வன்கொடுமைகள் ஜாதி இந்துக்களால் நிகழ்த்தப்படுகின்றன.
ஒருபுறம் வன்கொடுமைகளை எதிர்ப்பவர்களாகவும் மறுபுறம் – அதற்குக் காரணமான – வன்மங்களை ஆதரிப்பவர்களாகவும் செயல்படும் ஜாதி இந்து முற்போக்காளர்களின் வன்முரணை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், மரிஜ்ஜாப்பிகளையும் ரங்கநாயகிகளையும் தங்கள் புத்தியைக் கொண்டே புறந்தள்ளுவார்கள் என்பதற்கு இந்நூலே சிறந்த சான்றாயுதம்.
புனித பாண்டியன்
சிரியர் ‘தலித் முரசு’
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.