சஞ்சாரம்
எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே இருந்தேன். எல்லாம் சேகரித்த பின்னர் இதை நாவலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், நாவலாக எழுத நாதஸ்வர இசை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் உண்டானது. சஞ்சாரம் நாவலுக்கு 218ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: