சமணமும் தமிழும்
Original price
Rs. 51.00
-
Original price
Rs. 51.00
Original price
Rs. 51.00
Rs. 51.00
-
Rs. 51.00
Current price
Rs. 51.00
சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் தான் கொண்டன. ஆனால், 'ஊழ்' இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!
பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940-ம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?" என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்திற்கும் வேற்றுமை தெரியா திருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள் "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக்குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரிய வில்லையென்றால், பாமர மக்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லையே.