முந்நூறு இராமாயணங்கள்
வால்மீகி இராமாயணம் என்பது நூல் வடிவம் பெற்ற முதல் இராமாயணக் கதை என்ற அளவில் அதற்கான இடம் என்றும் உண்டு. ஆனால் அது மட்டும்தான் இந்தியப் பண்பாட்டை எடுத்துக்கூறும் ஒரே இராமாயணம் என்று சொல்வது தவறு. காரணம், இந்தியாவின் பல மாநிலங்களில் வேறு வேறு கூறுகளுடன் வித்தியாசமாகச் சொல்லப்படும் இராமாயணக் கதைகள் உண்டு.
இன்னும் சொல்லப்போனால், வால்மீகி இராமாயணம்தான் முதன் முதலாகச் சொல்லப்பட்ட ராமாவதாரக் கதை என்று கருதுவதுகூட தவறுதான். ஏனெனில், வால்மீகிக்கு முன்பும் ராமாவதார நிகழ்வு, புராணம் என்பவை வாய்மொழிக் கதைகளாக, தோல் பாவைக் கூத்து நிகழ்வுகளாக, நாட்டுப்புறப் பாடல்களாக, கதா காலட்சேபமாக, நாடகங்களாக எனப் பல வடிவங்களில் கூறப்பட்டு வந்துள்ளன.
இன்னொரு பக்கம், இந்தியாவைத் தாண்டி வேறு பல நாடுகளில் இராமாயணக் கதையின் நீக்கும் போக்கும் முற்றிலும் வேறாக இருக்கின்றன. தங்களுடைய மண் சார்ந்த கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு, பல மாநிலங்களும் பல நாடுகளும் ராமாவதாரக் கதையை அதன் ஆதார ஆன்மா கெடாமல், பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தி வருகின்றன. இந்தப் பன்மைத்துவம்தான் இராமாயணத்தின் ஆகப் பெரும் பலம்!
ஆனால் இந்தப் பன்மைத்துவம்தான் 'இந்துத்துவா' இந்தியர்களை மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது. ஏன்?