மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!
அம்மா அடையாளம் காட்டுகின்றவரைதான் அப்பா என்று குழந்தை அழைக்கிறது. குழந்தை வளர்ந்து ஆளான பிறகு ' இவர் நம் தந்தைதானா? ' என்று ஆராய்ச்சி செய்வதில்லை. அம்மாவையும் அம்மாவின் வாழ்க்கையையும் நம்புகிறான். இது இயல்பான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அச்சாணியில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர மூடத்தனமான சில நம்பிக்கைகளில் மூழ்கி மனிதன் சேற்றை அள்ளிப் பூசிக் கொள்ளும் நிலையும் உள்ளது. வழிப்பிள்ளையாருக்கு நூற்றி எட்டுத் தேங்காய் உடைப்பதாகச் சொல்லி வழியில் போகின்ற வருகின்றவர்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு செய்வது பக்தி என்ற பெயரில் செய்கிற போலித்தனமான செயல். சாமிச்சிலை அருகே நின்று ஆயிரத்தெட்டுத் தோப்புக்கரணம் போட்டும் பயனில்லை என்று ஆயிரத்தெட்டுத் தில்லுமுல்லுகள் செய்தவன் அலுத்துக் கொள்வதும் போலித்தனமானது.