சக்கரவர்த்தியின் திருமகன்
சக்கரவர்த்தியின் திருமகன் - கலைஞர் கருணாநிதி. 1955 களில் 'கல்கி' இதழில் முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரி, ராமாயணத்தை 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற கட்டுரையாக எழுதினார். News debate இல்லாத காலத்தில் அதற்கு எதிர்வினையாக கலைஞர் முரசொலியில் எழுதிய தொகுப்பு இது. எத்தனையோ அழுத்தமான வாதங்களை அடுக்கியிருக்கிறார். அதிலும், "ஆட்டு மந்தைபோலக் கூடி, 'கோவிந்தா' போட்டு பயனில்லை. நாம் கூறும் கருத்துக்களை நேர்மையாக எதிர்த்திடும் நாகரிமுள்ளவர்கள் முன்வர வேண்டும்" என்று எதிரணிக்கு சவால் வேறு விடுக்கிறார். இந்தக் கட்டுரை எழுதுகிற போது கலைஞருக்கு 30-35 வயது இருக்ககூடும். புரட்சிகரமான எழுத்துக்கள். ஒரு அரசியல்வாதியாக கலைஞர் மறக்கப்படலாம், ஒரு எழுத்தாளராக, பகுத்தறிவாளராக நிச்சயம் என்றும் நினைவுகூறப்படுவார். இந்தக்கால news debate பார்ப்பவர்களும், ராமாயண-பாரத கதைகள் மேல் ஆர்வமுள்ளவர்களும் படிக்கலாம்