விடாது கருப்பு பெரியாரியல் நாடகங்கள் 5
விடாது கருப்பு பெரியாரியல் நாடகங்கள் 5
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
விடாது கருப்பு பெரியாரியல் நாடகங்கள் 5
இறந்து பல்லாண்டுகள் ஆன பிறகும் தமிழகத்தின் ஊர்கள்தோறும் வெறுமனே கற்சிலையாக மட்டும் நிற்காமல் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் நீங்கா நினைவாக பெரியார் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். தமிழர்கள் அவரை நாத்திகவாதியாக மட்டுமே பார்க்காமல் சமூகப்போராளியாக, பெண்ணியவாதியாக, தன்மானத்தின் அடையாளமாகவே பார்த்து வருகின்றனர். அவருக்குப் பிறகு அமைப்புரீதியாக திராவிட கழகம் பிரிந்து செயல்பட்டாலும் அதன் வீரியம் குறைந்து விடவில்லை. தமிழகத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் தோன்றினாலும் அவற்றின் உட்கூறு பெயரளவிலாவது திராவிடம் என்பதாகவே இருக்கின்றது. தொடர்ந்து பல வழிகளிலும் பெரியாரியச் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி கலைவடிவில் நிலைபெறச் செய்துள்ளார் திரைப்படக்கலைஞர் ஞானசேகரன். பேராசிரியர் மு. ராமசுவாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் மற்றுமொரு கலைவடிவமாக தமிழகமெங்கும் அரங்கேறி வெற்றி பெற்றது. நாடகவெளியில் அயராது உழைத்து வருகின்ற பேரா.முரா பெரியாரியத்தை மக்களிடத்திலே தொடர்ந்து எடுத்துச் செல்லும் அரிய பணியை மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது. முரா எழுதியுள்ள ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ‘தோழர்கள்’, ‘ஏகன் –அநேகன்’, ‘….விடாது கருப்பு’, ‘வகுப்‘பறை’’ ஆகிய ஐந்து நாடகங்களையும் ஒவ்வொரு தமிழனும் படித்துப் பயனடைவதோடு முடிந்த இடங்களில் எல்லாம் அவற்றை அரங்கேற்றிடவும் முயல வேண்டும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் இந்த ஐந்து நாடகங்களின் தொகுப்பை ’விடாது கருப்பு; பெரியாரிய நாடகங்கள்-5’ என்ற தலைப்பில் பாங்குடன் வெளிக்கொணர்ந்துள்ளது.