
சசிகலா ஜாதகம்
சசிகலா ஜாதகம்-ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சசிகலா ஜாதகம் தொடர் புத்தகமாக வெளியாகிறது. சசிகலாவைப் பற்றி வெளியான முதல் நூல் இது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வரலாற்றை மிக நுணுக்கமாக விவரிக்கிறது. திருத்துறைப்பூண்டி வாழ்க்கை, நடராசனுடன் திருமணம், வீடியோ தொழில், ஜெயலலிதாவுடன் நெருக்கம், உயிர்த் தோழியாக மாறியது, போயஸ் கார்டனின் அதிகார மையமானது என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளை வெட்டி வீழ்த்தியது, வளர்ப்பு மகன் திருமணம், ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அப்போலோ முதல் ராஜாஜி ஹால் வரையில் கட்டியெழுப்பிய அரண் என சசிகலாவின் கதையை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் புலனாய்வு பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. சசிகலாவின் கணவர் நடராசன் எப்படி வளர்ந்தார்? ஜெயலலிதாவையே அவர் எப்படி ஆட்டிப் படைத்தார்? நடராசனை ஜெயலலிதா எந்த அளவுக்கு நம்பினார் என்பதையும் எல்லாம் ஆதாரங்களோடு எழுதப்பட்டிருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.