Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பொன்மொழிகள் (தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்)

Sold out
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

பொன்மொழிகள் (தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்)

அரசியலில் முஸ்லிம்கள் நம்மவர்களைப் போலவே எவ்வளவு கரணங்கள் அடித்தாலும், இனத்தில் இனப்பண்புகளில் தங்களைத் விடர்கள் அல்ல என்று எந்த நல்ல முஸ்லிமும் சொல்லமாட்டார்கள். "எப்போதுமே நீங்கள் இந்தப் பதவிகளைப் பற்றிக் கவலைப்பட மார்களா?' என்று நீங்கள் கேட்கலாம் கவலைப்படுவோம். இப்போதல்ல: ஒரு காலத்தில் எந்தக் காலத்தில்? பதவியில் உட்கார்ந்ததும், 'இனி இந்நாட்டில் பிராமணர்கள் இல்லை ' என்று உத்தரவு பிறப்பிக்கக் கூடிய அளவுக்கு நமக்கு ஆதிக்கம் கிட்டும் என்று தெரியும் காலத்தில், அதுவரை நாம் பதவிகளைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டோம். அவையெல்லாம் நாம் துப்பிய தாம்பூலங்கள் தான். பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக - நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறதென்பது எங்களுக்குத் தெரியும். இன்றுள்ள நிலையில் எந்த பொதுஜனத்தொண்டனும், எந்த பொது நலவாதியும். எந்த சமூகவாதியும் சட்டசபைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டான். வெறும் அரசியல்வாதிகள் சமூகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலை இல்லாத சுத்த சுயநலவாதிகள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.