ஒதுக்கப்பட்ட இந்துக்கள் - எம்.சி.ராஜா
ஒதுக்கப்பட்ட இந்துக்கள் - எம்.சி.ராஜா
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஒதுக்கப்பட்ட இந்துக்கள் - எம்.சி.ராஜா
பெருந்தலைவர் எம்.சி. ராஜா'. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக முதன் முதலாக இந்திய (காலனிய இந்தியா) தேசிய அளவிலான இயக்கத்திற்கு வித்திட்டவர், இத் தேசத்தின் முதல் தலித் அரசப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் (1919). முதல் பாராளுமன்ற உறுப்பினராக (1925) பதவி வகித்தவர். ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டப் பாதுகாப்பிற்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கும் அடித்தளமிட்டவர். தமிழகம் மட்டுமன்றி இத்தேசம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ எனும் ஆய்வு நூலொன்றை 1927 ஆண்டில் வெளியிட்டவர். இத்தேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றைக் குரலாக நாடாளுமன்றத்தில் 1925 ஆம் ஆண்டிலேயே ஓங்கி ஒலித்தவர். பார்ப்பன பணியாக்களின் கூடாரமாகத் திகழ்ந்த காங்கிரசாரின் எதிர்ப்புகளை நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் எதிர் கொண்டவர்.