கருஞ்சட்டைப் பதிப்பகம்
நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும்
நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும்
Couldn't load pickup availability
நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் என்னும் சிறு நூலைத் தோழர் தீக்கதிர் குமரேசன் அவர்கள் எழுதிக் கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலின் சாராம்சம் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான வேறுபாடு. மூடநம்பிக்கைகளின் மூலம் பயனடைவோர் யார், பாதிக்கப்படுகிறவர்கள் யார், பார்ப்பனர்களிடம் மூடநம்பிக்கை குறைவாகவும் மற்ற சமூக மக்களிடம் அதிகமாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு நிறைவான பதிலையும் தருகிறார் இந்நூலின் ஆசிரியர்.
நாம் பலர் இப்படிச் சொல்வதைக் கேட்டிருப்போம். எனக்கு மூட நம்பிக்கை கிடையாது ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு என்பார்கள். கடவுள் நம்பிக்கையே மூடநம்பிக்கை தானே! ஐன்ஸ்டீன் கூற்றின்படி "The word God is for me nothing more than the expression and product of human weaknesses". மனிதனின் அச்சத்திலிருந்தே மூடநம்பிக்கை உருவாகிறது. இந்நூலின் ஆசிரியர் மொழியில் "ஒன்றைச் செய்தால் அல்லது செய்யத் தவறினால் தீங்கு விளையும் என்ற அச்சத்தின் அடிப்படையில், தீங்கைத் தவிர்க்க அல்லது ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட தீங்கைப் போக்க ஒரு மாற்றுச் செயலைக் கடைபிடிப்பதே மூடநம்பிக்கை எனலாம்." மூடநம்பிக்கைகள் குடும்பம், சமூகம், சமயம் என்று பல கட்டமைப்புகளின் அறிவுரைகளாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன.

