Skip to product information
1 of 3

விடியல்

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

ஆண்- பெண், இளம்பருவம்-முதிற்பருவம், மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள சமூக அமைப்பைப் பற்றியும், முதலாளியம் பற்றியும் கவலைப்பட வேண்டியதன் அவசியமே மார்க்சியத்தின் தேவையை அதிகரித்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்னும் நிலையைக் கடந்து மேற்சொன்ன அனைத்துக்குமான தத்துவம் என்னும் நிலைக்கு மார்க்சியம் சென்றுவிட்டதற்குக் காரணம் முதலாளியத்தின் இலாப வெறியே...

மார்க்சியக் கொள்கை அத்தனைக் கடினமானதல்ல என்பதைத் தன் படைப்பாற்றலால் நிகழ்த்திக் காட்டி யிருக்கிறார் மெக்சிக சிந்தனையாளரும் சித்திரக்கதை ஓவியருமான ரியுஸ் (நிஜப் பெயர்: எடுவார்டோ ஹம்பெர்தோ டெல் ரியோ கிராசியா). மார்க்சியக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி ஸ்பானிய மொழியில் 70-களில் அவர் எழுதிய சித்திரக்கதை பாணிப் புத்தகம், சில ஆண்டுகளிலேயே ‘மார்க்ஸ் ஃபார் பிகினர்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மிகவும் கடினம் என்றே நம்ப வைக்கப்பட்டுவரும் மார்க்சியக் கொள்கையை எளிய உதாரணங்களுடன் இலகுவாகப் படிக்கும் வகையில் இந்த நூலை உருவாக்கி யிருக்கிறார் ரியுஸ்.

- தி இந்து.

View full details