இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை | V. Sivaprakasam
இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை | V. Sivaprakasam
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை - V. Sivaprakasam
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வழிவகை செய்யும் இடஒதுக்கீடு என்பது ‘இனாம்’ அல்ல; மாறாக நெடுங்காலமாய் ‘உயர்’சாதி ஆளும் வர்க்கத்துக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே நிலவிவரும் வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுதான் என்ற மிக அழுத்தமான கருத்தைத் தன்னுடைய ‘இந்துத்துவாவும் மண்டலும்’ எனும் நூலில் பல ஆய்வுகள் செய்து விளக்கியிருக்கிறார் பேராசிரியர் வெ.சிவப்பிரகாசம். ஏற்கெனவே அவர் எழுதிய ‘பார்ப்பனரும் மண்டலும்’ எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இடஒதுக்கீடு குறித்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்த மாணவர் போராட்டத்தின் பின்னணி, அதனை இயக்கிய இந்துத்துவ சக்திகள், இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த விடாமல் அதிகார மையத்திலிருந்து செயல்பட்டுவரும் பிராமணர்களின் ஆதிக்க மனோபாவம் ஆகியவற்றைத் தன்னுடைய நூலில் 30 கட்டுரைகளில் பல்வேறு தகவல்களும் விளக்கியுள்ளார்.
- ரேணுகா