இலக்கியத்தில் பெண்ணியம் தலித் பெண்ணியம்
இலக்கியத்தில் பெண்ணியம் தலித் பெண்ணியம்
Regular price
Rs. 550.00
Regular price
Sale price
Rs. 550.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
‘தலித் இலக்கிய வரலாறை’ப் போன்றே ‘இலக்கியத்தில் பென்ணியம் – தலித் பெண்ணியம்’ என்னும் இந்நூல் ஒரு ஆய்வு நூல். மேலதிகமாக மாணவர்களுக்கான ஒரு கையேடு. பெண்களின் உலகம் தனித்துவமானது. நிலம், இயற்கை, பிரபஞ்சம் என விரிவடையக் கூடியது. இதைப் புரிந்துகொள்வது ஒன்றும் ஆண்களுக்குச் சிரமமானதில்லை; புரிந்து கொள்ளும் பார்வையை மழுங்க வைத்த அரசியலைப் பேசுவதும் சுலபமானதில்லை. அனைத்து வகை நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைத்த நிலையை ஒரு கேலிச் சிரிப்பால் கடக்கும் பெண்களின் புரிதல் உடலோடு மட்டும் மீந்தி நிற்பதல்ல. உணர்வுகளும் அடக்கம். தாய்மை, இறைமை எனப் போற்றுதலுக்குள்ளாகும் பெண்கள்தான் மழலை முதல் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்பதால் உடலையும் உணர்வையும் பேசிக் கடக்க முடியாத வெளியில் இருக்கிறது பெண்ணியமும் தலித் பெண்ணியமும். இதை விளக்கும் முகமாக இந்நூல் அமைகிறது. இதனளவில் கவிதை, சிறுகதை, நாவல் முயற்சிகள் பெண்ணியத்தை துலக்கமாக்கும் கருவிகளாக இந்த நூல் தன்னை முன்வைக்கிறது. ஆய்வாளர்கள் அவசியம் உறுதுணையாக்கிக் கொள்ளவேண்டிய நூல் இது.