
ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்
விண்மீன்களின் வகைகளைப் பற்றியும், சூரிய குடும்பத்தைப் பற்றியும் அரிய தரவுகள் உடைய பல புத்தகங்கள் தமிழில் இருக்கின்றன. அதனால் தரவுகள் குறைவாகவும் பிரபஞ்சம் ஆதி முதல் அந்தம் வரை எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் புத்தகம் இருக்கும். அறிவியல் தெரியாமல் மூட நம்பிக்கையுடன் இருந்த மனித சமுதாயத்தை மாற்றுவதற்காக உயிருடன் எரிக்கப்பட்ட ஞானிகள் முதல் வீட்டில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்த அறிவியலாளர்கள் பற்றியும் இங்கே காணலாம். இப்படிக் கடினப்பட்டுப் அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் வரலாற்றைக் கூறிய பொழுதும், இன்னும் இந்த நவீன உலகத்தில் கோள்களை நம்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஆதியும் அந்தமும் புத்தகம் அவர்களில் ஒரு சிலரையாவது அறிவியலை தெளிவாக அறிவதன் மூலம் மாற்றினால், இந்தப் புத்தகம் எழுதியதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.