|
தியாகமே திணிக்கப் பட்ட குணமாய்
அடிமை உழைப்பே வாழ்வாய்
ஆணின் ஒட்டுண்ணி உயிராய்
இனியும் எத்தனை காலம் பெண்ணே?
ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஒவியா நூலில் வெளிப்படுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது.
Pennum Aanum Onnu, Oviya
ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா
எழுத்தாளர் | ஓவியா |
---|---|
பதிப்பாளர் | நிகர்மொழி பதிப்பகம் |
பக்கங்கள் | 152 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | காகித அட்டை |