Collection: சென் பாலன் (Sen Balan)

மருத்துவர் மற்றும் எழுத்தாளர் சென் பாலன் அவர்களின் நூல்களின் தொகுப்பு. எழுத்தாளர் சென்பாலன் தனது புதுமையான எழுத்து நடையால் தனக்கென ஒரு வாசகர் பரப்பை உருவாக்கியவர். "அமேசான் பென் டு பப்ளிஷ்" வெற்றியாளராகக் கவனம் ஈர்த்தவர். பல்வேறு தமிழ் இதழ்களில் உடல் நலம், நோய் சிகிச்சை மற்றும் நவீன மருத்துவத்தின் நன்மைகள் குறித்து தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதி வருபவர். குற்றப்புலனாய்வு வகைமையிலான சமகால தமிழ் நாவல்களில் இவரது நூல்கள் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.