மக்களாகிய நாம்
அரசியல் சாசனம் என்பது அரசாங்கம், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தொடர்பானது என்ற எண்ணத்தில் பலரும் அது குறித்து அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இந்த நூலைப் படித்த பின் எப்பேற்பட்ட ஓர் அழகான, சுவையான ஒன்றை 'மிஸ்' செய்திருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி. அரசியல் சாசன முகவுரை, அதன் பின்னால் இருக்கும் போராட்டங்கள், வலிகள், தலைமைப் பண்பு என பலவற்றை 'வெப்சீரிஸ்' பார்ப்பது போன்ற நடையில் நிர்மல் எழுதி உள்ளார். 'கிரியேட்டிவ் டாக்குமென்டேஷன்' என்றொரு புதிய வகைமையை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள இப் புத்தகம், புனைவின் வாசிப்பின்பம், அபுனைவின் தரவுகள் என இரண்டையும் ஒருங்கே சாத்தியப்படுத்தி இருக்கிறது. புத்தகம் சொல்லும் வரலாற்று கதைகளை படிக்கும்போதே நம்மையும் அறியாமல் அரசியல் சாசனத்தின் சாரமும், அதன் முகவுரையின் முக்கியத்துவமும் எந்த முயற்சியும் இல்லாமல் நம்முள் நுழைந்து, மனதில் பதிந்து விடுகின்றன. விறுவிறு நடையில் , வித்தியாசமான பாணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், நம் அனைவரது இல்லத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் அவசியம் இருக்க வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.