Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது) - பாகம் 2

Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
உளமாரப் பாராட்டுகிற அளவிற்கு ஆன்மீகத்தின் மத்தியில் இருந்தபடியே பெரியாரியக் குரலை எதிரொலித்து விழிப்புணர்வைத் தந்தார் தாத்தாச்சாரியார். அவரிடம் கேட்கக் கேட்க வேதஞானமும் வெளிச்ச சிந்தனைகளும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. அவரே இப்போது இந்த 'சடங்குகளின் கதை' மூலம் நம் சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் சடங்குகளின் உள்ளார்ந்த காரணங்களை ஆராய்ந்து நமக்குத் தெளிவை ஏற்படுத்தும் திருப்பணியைச் செய்திருக்கிறார்.
முதுமையின் உச்சத்தில் பார்வைத் திறனும், கேட்கும் திறனும் குறைந்துபோன நிலையில் மெலிந்த குரலில் வலிமையான தகவல்களை தாத்தாச்சாரியார் தர... அதை அப்படியே உள்வாங்கி... பொருள் பிசகாமல் எளிமையாய் அழகாய்க் கட்டுரை வடிவில் நமக்குத் தந்திருக்கிறார் நக்கீரன் உதவியாசிரியர்களில் மிகவும் இளைய தம்பியான ஆரா.
சமீபத்தில் நாவல்பாக்கம் என்கிற ஊருக்கு என் இஷ்டமித்ர பந்து ஒருவரின் சதாபிஷேகத்துக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கே என்னை சந்தித்த அநேகரும். "நீர் என்ன நெனைச்சுண்டிருக்கீர்? ஹிந்து மதத்தை கேவலப்படுத்துறதுனு முடிவு பண்ணிட்டீரா? அதுவும் நக்கீரன்குற ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் எழுதறது அடாண்டம்." என போர்க்கொடி தூக்கினர். நான் கேட்டேன். "நக்கீரன் யார்? போக்கிரியா? ஜல விரோதியா? அவன் ஜனங்களுக்கெல்லாம் உண்மைய எடுத்துச் சொல்றான். நான் புஸ்தகங்கள்ல நம்ம முன்னோர்கள் எழுதின விஷயத்தைதான் எடுத்துச் சொல்றேன். நக்கீரன்ல அதை எழுதறா.. இதுல என்னடா தப்பு இருக்கு? னு கேட்டேன், பேசாம வாயை மூடிண்டு போயிட்டானுங்க. நக்கீரன் பத்திரிகையின் எடிட்டர் என்னைப் பார்க்க அவரது தம்பிகளோடு வந்திருக்கார். அப்போது அவர்கிட்ட சொன்னேன், மத்தவன் சொல்ல பயப்படற விஷயங்களை நீ சொல்றே. ரொம்ப தைரியமா சொல்றே. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் அவ்வளவுதான். நீ மகாபுருஷன்னு அவருக்கு ஆசிர்வாதம் செஞ்சேன். உண்மை அதுதான். நக்கீரன் பத்திரிகையில் என் கருத்துக்கள் தொடர்ந்து வந்தபோது- பலபேர் என்னை மிரட்டினார்கள். பகவானும், நக்கீரனும் சேர்ந்து என்னை தைரியப்படுத்தினார்கள்.