மக்கள் தலைவர் காமராஜர்
மக்கள் தலைவர் காமராசர்
தொகுத்தவர்: சுந்தரபுத்தன். இன்னும் கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது.ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுதும் பொதுவாழ்வில் கடைபிடித்த எளிமையும் தூய்மையும் காற்றில் பறந்து விட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றிப் பேசவருகிறார்கள் .காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல.அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம்.அவரது தனிப்பட்ட வாழ்க்கையொடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது.ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள் இளம் தலைமறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.எளிமையான வாழ்வின் மூலம் அரசியல் வாழ்வில் ஓர் அரிய இலக்கணத்தை உருவாக்கிய காமராசர் கிங்மேக்கராகவும் உயர்ந்தவர்.அந்தப் பச்சைத் தமிழர் அப்படி என்னதான் செய்தார்? என்ற கோள்விக்கும் அவருக்கும் கூட ஏன் நெருக்கடிகள் நேர்ந்தன என்பதற்கும் சிறு விடையாக இந்நூல்.