மகாத்மா பூலே - தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
"இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடுகெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக்குரிய) அடிமைகளான அவர்களுக்கு இழிவு கற்பித்து வைத்துள்ளார்கள். நாம் யாருக்கும் ஒருபோதும் அடிமை (குடி) அல்லோம். வேதங்களை வெளிப்படையாக கேள்விக்கு உள்ளாக்குங்கள். பகிரங்கமாக (வெளியில் அவற்றை இழுத்துப் போடுங்கள். தஸ்யூக்கள் (= அடிமைகள்) உண்மையில் வீரமும், இதய சுத்தமும், தம் நடத்தையில் நேர்மையும் உள்ளவர்களாக இருந்தார்கள்...."
"உண்மையாக நடப்பதில்தான் மெய்யான மனிதநேய சமயம் அடங்கி உள்ளது. இந்த மந்திர கவசத்தைப் பார்ப்பனன் அறியான். கடினமாக உழைக்கும் சூத்திரரின் பாதங்களை செல்வத்தின் தேவதையான திருமகள் வருடிக் கொடுக்கிறாள். அவர்களை ஒரு போதும் அவள் சாமானிய விவசாயிகள் என்றோ, தொழிலாளர்கள் என்றோ ஏளனமாக வெறுத்து ஒதுக்குவதில்லை. (உங்களைச் சுற்றியுள்ள) எல்லாரையும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்தால் உலகில் இருக்கும் அனைத்து தீமைகளும் மறைந்து விடும். சுறுசுறுப்பாக உழைக்கும் மனிதரே ஏழைகளின் உண்மையான நண்பர். அவருடைய மேன்மைக்காக நீங்கள் பாடுபட வேண்டும் என்கிறான் ஜோதி."