
அம்பேட்கரிசம் அறிக்கை பரப்புதலும் எதிர்புகளும்
அம்பேட்கரிசம் அறிக்கை பரப்புதலும் எதிர்புகளும் - எஸ். கெளதம் அம்பேட்கர்
******
புத்தர் பிறந்தார்; புத்திசம் பிறந்தது. இயேசு பிறந்தார்; கிறிஸ்தவம் பிறந்தது. நபிகள் நாயகம் பிறந்தார்; இஸ்லாம் பிறந்தது. காரல் மார்க்ஸ் பிறந்தார், கம்யூனிசம் பிறந்தது. பாபாசாகேப் அம்பேட்கர் பிறந்தார்; அம்பேட்கரிசம் பிறந்துள்ளதா?
'அம்பேட்கரிஸ்ட்கள்' என்று சொல்லிக்கொண்டு, 'பட்டியல் சாதி - பாபாசாகேப் அம்பேட்கர்' தளத்தில் இயங்கும், பட்டியல் சாதித் தலைமைக் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளாகிய இணைப்புப் பிரிவினரே, நீங்கள் யாருடைய கொள்கைகளை அல்லது 'இசம்களை' ஏற்றுக்கொண்டு பரப்புரை செய்கிறீர்களோ, அவற்றை உங்கள் தலைவருடைய கொள்கைகள் அல்லது 'இசம்' என்று பரப்புரை செய்யுங்கள்!
உங்கள் தலைவருடைய கொள்கைகளை அல்லது 'இசம்களை', அம்பேட்கர் தொகுதிகளில் இருப்பதாக அல்லது அம்பேட்கர் அடையாளத்தில் பரப்புரை செய்வதால், 'அம்பேட்கரிசம்' என்ற குழந்தை கருவிலேயே சாகும் நிலையை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள்; அல்லது பிறந்தபின் சாகும் நிலையை ஏற்படுத்துகிறீர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.