திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்
ஆசிரியர் குறிப்பு:
அழகியபெரியவன் வழக்காறுகளின் மொழி ஓர்மை பெரும்பாலும் ஜாதிக்குட்டையாய் நாறித்தேங்கும் அல்லது நகரம் – கிராமம் என பழிப்புக் காட்டும். அவ்வாறான மனத்தடைகளற்ற அழகியபெரியவன், மனிதப் பரிமாணங்கள் அழகியல் படிமங்களோடும், யாரும் இருவரை பாவிக்கத் துணியா தமிழ் நீலிக்கதை போன்று சிற்றரங்கள் சார்ந்தியங்கும் அமானுஷ்யக் குறியீடுகளோடும் தேர்ந்த கதையாடல்களை முன் வைக்கிறார். கதை, கவிதை, நாவல்பரப்பில் இதுவரை காண்பிக்கப்படாத வட தமிழகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், பாலியில் சுரண்டலுக்கும் உள்ளாகும் தலித்துகளும், பெண்களுமே அழகிய பெரியவனின் உளப்பாங்கு மிக்க கதை மாந்தர்கள். இதுவரை நான்கு சிறுகதை தொகுப்பு, மூன்று கவிதை தொகுப்பு அய்ந்து கட்டுரைத் தொகுப்புகளையும் ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டுள்ள அழகிய பெரியவன் ‘சிச்சுபோவும் அவளின் நண்பர்களும்’ என்கிற குழந்தை இலக்கியத்தையும் மொழி பெயர்த்துள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.