இஸ்லாமியத் தத்துவ இயல் - பதிப்புரை

இஸ்லாமியத் தத்துவ இயல் - பதிப்புரை

தலைப்பு

இஸ்லாமியத் தத்துவ இயல்

எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயன்
பதிப்பாளர்

நியூ சென்சுரி புக் ஹவுஸ்

பக்கங்கள் 200
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.170/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/islaamiya-thathuva-iyal.html

 

பதிப்புரை

ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியத் தத்துவச் சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவராவார். இந்திய அளவிலான நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகள் மேலதிக கவனத்தைப் பெற்றதோடு இன்றளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியா முழுமையும் மற்றும் பெரும்பாலான உலகநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பெற்ற அனுபவங்களால் தாம் எழுதிய நூற்களால் அறிவுலகில் தனக்கான தடத்தைத் திறம்பட நிறுவிக்கொண்டவர்.

மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்துள்ள இவர், இஸ்லாமியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்துவிரிந்த தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் போன்ற வற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் நூலில் இடம்பெற்றுள்ளன. இறுதி அத்தியாயத்தில் 'ஐரோப்பாவில் தத்துவப்போர்' என்ற கட்டுரை அரிதானதும் மிகச்சிறப்பானதுமாகும். இஸ்லாம் மார்க்கத் தத்துவார்த்த சிந்தனைகளுடன் சேர்த்து அதில் நிலவிய மாறுபட்ட கருத்துகளையும் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் துணை நிற்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வல்லுனராக விளங்கிய ஏ.ஜி.எத்திராஜுலு அவர்கள் இந்நூலை இந்தியிலிருந்து தமிழுக்குத் தருவித்துள்ளார். வாசகர்களுக்கு எளிய முறையில் இந்நூலை உவந்தளித்துள்ள அவரது புலமையையும் எழுத்தாற்றலும் போற்றுதலுக்குரியது.

இந்நூலின் முதற்பதிப்பு என்சிபிஎச் வெளியீடாக 1985ம் ஆண்டு வெளியானது. 2003ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. தத்துவார்த்தச் சிந்தனைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்நூலின் கால அவசியத்தைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய வடிவமைப்பில் மீள்பதிப்பு செய்யப்படுகிறது.

- பதிப்பகத்தார்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog