திராவிட இயக்க வேர்கள் - பதிப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-vergal 
பதிப்புரை

திராவிட இயக்க வேர்கள் இரண்டாம் பதிப்பு உங்கள் கைககளில் தவழுகிறது. எப் போதோ வெளிவந்திருக்க வேண்டிய இப்பதிப்பு பல இடர்பாடுகளினால் வெளிவராமல் இப்போது வெளிவருகிறது.

இந்த இரண்டாம் பதிப்பு திருத்திய பதிப்பாகும். முதற் பதிப்பில் 30 கட்டுரைகளே இடம் பெற்றிருந்தன. இப்பதிப் பில் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரைப் பற்றிய இரு கட்டுரைகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. முதற்ப திப்பு கட்டுரைகள் அனைத்தும் முரசொலி நாளேட்டில் புதையல் வார மலரில் (4.3.1990 முதல் 17.2.1991 வரை) எழுதியவை. பிந்திய இரண்டு கட்டுரைகள் சங்கொலி வார ஏட்டில் எழுதியவை.

திராவிட இயக்கத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகழ்பெற்ற இயக்கத் தொண் டர்கள் என 148 பேர்களைப் பட்டியலிட்டு வைத்து - இதுவரை 68 பேர்களை மட்டுமே எழுதியிருக்கின்றோம்.

இவற்றில் திராவிட இயக்க வேர்கள் எனும் நூலில் 32 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 31 பேர்கள் பற்றிய கட்டுரைகள் 'திராவிட இயக்கத் தூண்கள்' எனும் நூலில் இடம் பெற்று இருக்கின்றன.

 

 

மயிலை

21.4.1999

                                     க.திருநாவுக்கரசு

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog