Pen Yen Adimaiyaanaal - Nansei
இந்தப் புத்தகத்தில் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் அடிமையானார்கள் அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது
இந்நூல்:
உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.
மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.
இந்தப் புத்தகத்தில் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் அடிமையானார்கள் அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, எந்தக் காரண காரியங்களால் அவர்கள் அடிமைத்தனத் திலிருந்து விடுபட்டுச் சுதந்திர மக்களாக வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டவுமான கருத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். அன்றியும், இப்புத்தகக் கருத்துகள் இன்றைய நிலையில் எந்த மதத்திற்கும், எந்த தேச மக்களுக்கும், எந்தச் சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.
நன்றி:https://www.amazon.in/பெண்-அடிமையானாள்-Tamil-தந்தை-பெரியார்-ebook/dp/B078L2DZG8
எழுத்தாளர் | பெரியார் |
---|---|
பதிப்பாளர் | நன்செய் பிரசுரம் |
பக்கங்கள் | 48 |
பதிப்பு | நான்காவது பதிப்பு - 2022 |
அட்டை | காகித அட்டை |